இஸ்ரேலில் உருவான புதிய வகை வைரஸ்! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் பல்வேறு வேரியண்டுகள் அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது ஒமிக்ரான் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும்.
கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூவென்சா வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.