பூஸ்டர் தடுப்பூசி அவசியமா?
முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் பூஸ்டர் டோஸ் பற்றி சிந்திக்கப்படும் என தகவல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21.07 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கூறியதாவது, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 டோசும் மக்களுக்கு போட கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை.
அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் பூஸ்டர் டோஸ் பற்றி கவனத்தில் கொள்ளப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன. தடுப்பூசிக்கு பிறகு பொதுவான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது என தெரிவித்துள்ளார்.