1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (15:16 IST)

சிங்கிள் டோஸ் தடுப்பூசி - ஜான்சன் & ஜான்சன்-க்கு அனுமதி!

இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. 
 
மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. 
 
இந்நிலையில் இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 5-வது கொரோனா தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.