வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:11 IST)

50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் கைது!

50 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்ற பகுதியில் 50 ரூபாய்க்கு மருத்துவ பணியாளர் ஒருவர் தடுப்பூசி என்று போலியான மருந்தை ஒரு சிலருக்கு செலுத்தியுள்ளார். 50 வயதான மோகன்ராம் என்ற அந்த மருத்துவ பணியாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாயு பிரச்சனைக்கு செலுத்தப்படும் ஊசிகளை கொரோனா தடுப்பூசி என ஏமாற்றி பொதுமக்களுக்கு செலுத்தி பணம் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன