18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி கிடைப்பது எப்போது?
18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது.
மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், 18 வயதிற்கு மேலானவர்களுக்கு மே மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது.
இந்த ஆய்வுகளின் முடிவுகள் இம்மாதத்திலேயே வந்து சேரும். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.