ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (16:25 IST)

ஒட்டகத்தின் சாணத்தை உபயோகித்து வீடு கட்டலாம்…ஆச்சரியமளிக்கும் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகங்களின் சாணம், வீடு கட்ட உதவுவதாக, ஆச்சரியமளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பாலைவனங்களில் போக்குவரத்திற்காகவும், சுமை தூக்கவும், பால் உற்பத்திக்காகவும் ஒட்டகங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் மாட்டுச் சாணம் பல வகைகளில் மனிதர்களுக்கு பயன்பட்டுவருவது போல, ஐக்கிய அரபு அமீரகத்திலும் பல வகைகளில் பயன்படுகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், ராஸ் அல் மைகா என்னும் பகுதியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை விவசாயிகள் வளர்த்துவருகின்றனர்.

அந்த ஒட்டகங்களின் சாணங்களை, அங்கு இருக்கும் விவசாயிகள், வீடு கட்ட முக்கிய பொருளாக உள்ள சிமெண்ட் தயாரிப்பதற்காக, சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். மேலும் இந்த சாணத்தால் நிலக்கரி மிச்சமாவதாகவும், கால் நடைகளின் கழிவுகள் வீணாக்கப்படாமல், அவைகளை சேகரித்து பயன்படுத்தி வருவதாக சிமெண்ட் தயாரிப்பு நிர்வாகம் கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக கழிவு மேலாண்மை அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து அமீரக அரசு, பத்தில் ஒரு பங்கு ஒட்டக சாணமும், 9 பங்கு நிலக்கரியும் சேர்த்து 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்படும்போது சிமெண்ட் கலவை கிடைப்பதாக கூறியுள்ளது. தனமும் 50 டண் ஒட்டக சாணம், சிமெண்ட் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஒட்டகங்கள் இருக்கும் இடம் சுகாதாரமாக இருப்பதாக விவசாயிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.