சிறுமியை தூக்கி வீசியெறிந்த காட்டெருமை.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (17:55 IST)
அமெரிக்காவில், ஒரு காட்டெருமை, சிறுமியைத் தூக்கி வீசி எறிந்த வீடியோ ஒன்று மனதை பதறவைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் என்னும் தேசிய பூங்கா ஒன்றில், சுற்றுலா பயணிகள் எப்போதும் குவிந்திருப்பார்கள். சமீபத்தில் ஒரு தம்பதி, அவர்களது 9 வயது மகளுடன் அங்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பூங்காவில் சுற்றிகொண்டிருந்த ஒரு காட்டெருமை, அந்த சிறுமியை துரத்திக்கொண்டு ஓடி, முட்டி வீசி தூக்கி எறிந்தது. இதை அந்த பூங்காவில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனினும் அந்த குழந்தைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.இதில் மேலும் படிக்கவும் :