தொடர்புடைய செய்திகள்
- இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!
- அபாயகரமான செஜ்ஜில் ஏவுகணை தயார் நிலையில்? - இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
- ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேலை சுற்றி கப்பலை நிறுத்தும் அமெரிக்கா! - என்ன நடக்கிறது?
- 16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?
- சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!
ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: புதின் எச்சரிக்கை..!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிட்டிருப்பதாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது ஆபத்தான ஒன்று என்றும், எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் இருக்கும் ஒரே ஒரு அணுமின் நிலையமான புஷேர் அணுமின் நிலையம் ரஷ்யாவால் கட்டி கொடுக்கப்பட்டது என்றும், அந்த அணுமின் நிலையத்தைதான் குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்கி வருவதாகவும் கூறப்படும் நிலையில், ரஷ்ய அதிபரின் எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் இந்த விஷயத்தில் எதிர்மறை கருத்துக்களை உடையதாக இருப்பதால் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
