திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 31 மார்ச் 2025 (10:26 IST)

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு மின்நிலையங்களை உருவாக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்க நிறுவனம் ஹோல்டெக் இன்டர்நேஷனலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் எரிசக்தித் துறை (டிஓஇ) இந்த அனுமதியை உறுதி செய்துள்ளது. இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் 2008-ஆம் ஆண்டில் கையொப்பமான நிலையில், இதன் வணிக பயன்பாட்டில் இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
 
ஹோல்டெக் இன்டர்நேஷனல் இந்தியாவின் பிராந்திய நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா, டாடா கன்சல்டிங் என்ஜினியர்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 300 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை பரிமாற அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதி பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்படும்.
 
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த தொழில்நுட்பம் அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கே மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்புக்காக இதனை பயன்படுத்த முடியாது. மேலும், ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடம் காலாண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
 
இந்த ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவில் அணுமின்நிலையங்கள் வளர்ச்சியடைந்து, முக்கிய நிறுவனங்களான டாடா கன்சல்டிங் என்ஜினியர்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோவுடன் ஹோல்டெக் இணைந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது. இதன் நிறுவனர் கிரிஸ் பி. சிங், இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார்.
 
Edited by Mahendran