திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (23:14 IST)

விரைவில் , பிரமாண்டமாக வின்னர் -2 திரைப்படம் ...பிரஷாந்த் தகவல்

prashanth
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் வளர்ந்து வந்த காலத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவராக விளங்கியவர் பிரஷாந்த்.

இவர், மணிரத்ன் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கரின் ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில்  நடித்திருந்தார்.

அதன்பின் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வெளியான சாகஷம், ஜானி போன்ற படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. இதையடுத்து, இந்தியில் வெளியான அந்தகன் படத்தின் தமிழ் ரீமேக்கை தற்போது தியாகராஜன் இயக்க, அதில், பிரஷாந்த், வனிதா, பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.  நடிகர் பிரஷாந்த் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அந்தகன் படம் விரைவில் வெளியாகும் எனவும், வின்னர் 2 படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் வடிவேலுவின் காமெடிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.