1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (23:04 IST)

கீர்த்தி சுரேஷின் ''வாஷி ''படம் வெற்றியா ? தோல்வியா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் 'வாஷி' படம் கடந்த வெளியாகியுள்ள நிலையில், இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரெஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாஷி.  இப்படத்தில் இருவரும் வக்கீலாக நடித்துள்ளனர் . இப்படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஜி.சுரேஷ்குமார் மற்றும் ரேவதி கலான் மந்திர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை எனத் தெரிகிறது.

இப்படத்திற்கு கவலையான விமர்சனங்கள் வருவதால் படக்குழு அதிர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்படம் மலையாளத்தில் ஒரு பிரேக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நடிகை கீர்த்தி, சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் போலா சங்கர் என்ற படத்திலும்  நானியுடன் தசாரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், உதய நிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான மாமன்னன் படம்  ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.