திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (21:53 IST)

கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் பைடன்...பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

biden
அமெரிக்காவின் கொலரோடா என்ற மாகாணத்தின் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவில் அதிபர் பைடன் கால் இடறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கொலரோடா என்ற மாகாணத்தின் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்குப் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள வந்தார்.

அவரைப் பேச விழா ஏற்பாட்டாளர்கள்  அழைப்பு விடுத்தபோது, அதிபர் பைடன் பேச எழுந்தார். எதிர்பாராவிதமாக  அவரது கால் இடறி கீழே விழுந்தார்.

உடனே அருகிலிருந்த விமானப்படை வீரர்கள் அவரை கைத்தாங்கலாக தூக்கிவிட்டனர். இதனால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

பின்னர், விழாவில் ஜோ பைடன் விமானப்படை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், அவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துகள் கூறினார்.

அவர் எழுந்து நடந்து சென்றபோது, மணல் மூட்டை தடுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. விழுந்த பின் அதிகாரிகள் உதவியின்றி அவர் தானாகவே எழுந்தது குறிப்பிடத்தக்கது.