செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (13:22 IST)

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து

Afghanistan accident
ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ- பல் மாகாணம் சயத் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் திருமண  நிகழ்ச்சியில் பங்கேற்க பேருந்தில் சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 25  பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ- பல் மாகாணம் சயத் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர்  நேற்று  அருகில் உள்ள மாவட்டத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு பேருந்தில் சென்றனர்.

அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் அனைவரும் சயத் மாவட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மலலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.

இந்த விபத்து  நடைபெற  ஓட்டுனரின் கவனக்குறைவுத காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.