வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (12:04 IST)

உக்ரைன் ராணுவத்திற்கு இணையதள கருவிகள்! – எலான் மஸ்க் செயலால் கடுப்பில் ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு எலான் மஸ்க் இணையதள கருவிகளை வழங்கியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 மாத காலத்திற்கு மேல் போர் நடத்தி வரும் நிலையில் பல நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்ந்து உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான இணையதள கருவிகளை அளித்து உதவி வருகிறது. இதுவரை சுமார் 15000 இணையதள கருவிகளை உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.