வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!

ukraine students2
உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!
போரின் காரணமாக உக்ரைனில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில் அந்த மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த போர் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைனில் மருத்துவ படிப்பு உள்பட பல்வேறு படிப்புகள் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். 
 
இந்த நிலையில் அந்த மாணவர்களின் படிப்பு எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருந்த நிலையில் தற்போது உக்ரைனில் படித்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போரின் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடரலாம் என ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்