வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (15:52 IST)

பூம் பூம் ரோபோ காப்! ரோபோ காப்! ரோபோ காப்!

அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் போலீஸாருக்கு பதில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வுலகில் ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடக்கின்றன. இக்குற்றங்களை குறைக்கவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கான போலீஸார்கள் உள்ளனர்.

ஆனாலும் எல்லா நேரங்களிலும் குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது முடியாத காரியம். இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா, மாணாங்களின் சில முக்கியமான பகுதிகளில், போலீஸாருக்கு பதில் ரோபோக்களை இறக்கியிருக்கிறது.

இந்த போலீஸ் ரோபோட்டுக்கு எச்.பி. ரோபோகாப் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ரோபோட்டில் நான்கு புறமும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கும் அனுப்பும்படியும் அமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது புதிய செய்தி இல்லையென்றாலும், இந்த ரோபோகாப் என்னும் கண்டுபிடிப்பு போலீஸார்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொது மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.