1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva

இறந்த பின்னும் சமூக வலைதளங்களில் உலவலாம்: மெட்டாவின் ஏஐ 'மறுபிறவி' திட்டம்!

meta
மெட்டா நிறுவனம் 'டிஜிட்டல் மறுபிறவி' எனப்படும் ஒரு வினோதமான தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன் மூலம், ஒரு பயனர் சமூக வலைதளங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்கும்போதோ அல்லது அவர் இறந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக ஒரு AI அந்தத் கணக்கை நிர்வகிக்கும்.
 
பயனரின் முந்தைய உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை ஆராய்ந்து, அவர் உயிரோடு இருந்தால் எப்படி செயல்படுவாரோ, அதே பாணியில் இந்த ஏஐ பதிலளிக்கும் மற்றும் பதிவுகளை இடும். 
 
இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை இப்போதைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை என மெட்டா தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், தரவு திருட்டு மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 
 
 
Edited by Siva