செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:27 IST)

பன்றிக்கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ கூறிய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி..!

பன்றி கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ என்று கூறிய இந்தோனேசியா இளம்பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிக் டாக் மூலம் பிரபலமாக இருந்தார். அவர் ஒரு வீடியோவில் பன்றி இறைச்சி துண்டை கையில் வைத்துக்கொண்டு ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை சொல்லி சாப்பிட்டார். 
 
பிஸ்மில்லா என்பது இறைவனின் பெயரால் என்ற அர்த்தம் என்பதால் இந்த வார்த்தையை பயன்படுத்தி பன்றி கறி சாப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran