1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian robbery in Hindu temple at canada

கனடாவில் இந்து கோவிலை உடைத்து கொள்ளையடித்த இந்தியரை கனடா காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

கனடா
கனடாவில் டொரண்டோ பகுதியில் இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்ததை அடுத்து சிசிடிவி கேமராவை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில் உண்டியல் பணத்தை கொள்ளை அடித்தது இந்தியர் என்பது தெரிய வந்தது
 
அவரை கனடா போலீஸ் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் 41 வயது ஜெகதீஷ் என்பதும் பிராம்டன் நகரில் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்தது.  அவர் இந்து மதத்தின் மீது வெறுப்பு கொண்டோ அல்லது யாராலோ தூண்டப்பட்டோ இந்த கொள்ளையை செய்யவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில்  தெரிவித்துள்ளதாகவும் முழுக்க முழுக்க பணத்திற்காகவே இந்த கொள்ளை அடித்ததாகவும் தெரியவந்தது.  
 
மேலும் இந்த ஆண்டில் ஏற்கனவே பல கோயில்களில் அவர் கொள்ளையடித்துள்ளதும் விசாரணைகள் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் முதலிடம்