திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (18:20 IST)

சந்தன பெட்டியில் விஜயகாந்தின் உடல்.. முதல்வர் அஞ்சலி.. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!

சந்தன பெட்டியில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட நிலையில்  முதல்வர் ஸ்டாலின் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். அதன்பின்  72 குண்டுகள் முழங்க அரசு  மரியாதை அளிக்கப்பட்டது,
 
விஜயகாந்த் உடலுக்கு  முழு அரசு  மரியாதை செலுத்தப்படும் வகையில் 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு  இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
 
கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செலுத்தினர்.
 
சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு  பிரேமலதா விஜயகாந்த் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தார். கேப்டன் விஜயகாந்தின் கைகளை பிடித்தப்படி அவரது மனைவி பிரேமலதா கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைத்தது. 
 
Edited by Mahendran