ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:39 IST)

எங்கள் ராணுவ வீரரை கொன்றவர்கள்; சீன ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியா!

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் நடைபெற உள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்கி 20ம் தேதி வரையில் நடைபெறும் நிலையில் உலக நாடுகளை சேர்ந்த பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டில் நடந்த இந்திய – சீன ராணுவ மோதலில் பல இந்திய வீரர்கள் பலியானார்கள். இதற்கு காரணமான சீன படைத்தளபதி ஒலிம்பிக் தொடக்க போட்டியில் தீபம் ஏற்றி செல்வதால் இதை கண்டித்துள்ள இந்தியா அந்த போட்டிகளை புறக்கணித்துள்ளது.