சீனாவில் கொரொனாவுக்கு பயந்து ஊரை விட்டு ஓடும் தொழிலாளர்கள்
சீன நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இத்தொற்று பல உருமாறுதல் அடைந்து தற்போது ஒமிக்ரான் வடிவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரரித்து வருகிறது. குறிப்பாக செங்கோவ் பகுதியில் தற்போது கொரொனா பரவலை குறைக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஆப்பிள் மின்சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐ –போன் தொறிற்சாலையில் 3 லட்சம் பேர் பணியாற்றும் நிலையில் ஊழியர்கள் பலருக்கு கொரொனா உறூதியாகியுள்ளதால், பலபேர் அங்கிருந்து தொற்றுக்குப் பயந்து, வெளியேறியுள்ளதாக தகவல் வெலியாகிறது.
Edited by Sinoj