திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:32 IST)

அணியில் இடம் கிடைக்காத விரக்தி… சாய்பாபா படத்தை பதிவிட்டு புலம்பிய இந்திய வீரர்!

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார் பிருத்வி ஷா.

உலகக்கோப்பை தொடரை முடித்ததும் அடுத்து இந்திய அணி நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்த அணியில் இடம்பெறவில்லை. அதை முன்னிட்டு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபா புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக்.