வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:15 IST)

வெளிநாட்டில் சொத்து வாங்காத ஒரே ஊழலற்ற தலைவர் மோடி: இம்ரான்கான் பாராட்டு

வெளிநாட்டில் சொத்து வாங்காதவர் ஊழலற்ற ஒரே தலைவர் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உலகின் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். உலகில் வேறு எந்த அரசியல் தலைவரும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்து இல்லை
 
நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டில் ஒரு சொத்து கூட இல்லை. அவர் ஊழலற்ற ஆட்சி செய்கிறார். ஆனால் நவாஸ் ஷெரிப் குடும்பம் வைத்திருக்கும் வெளிநாட்டு சொத்துக்களை பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாது
 
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தான் சுதந்திரம் பெற்றனர். ஆனால் பாகிஸ்தான் பல துறைகளில் பின் தங்கி இருக்கிறது என்றும் இம்ரான்கான் கூறியிருந்தார்