1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (11:02 IST)

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் ராஜினாமா?

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல். 

 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சி அமளி செய்தது. அதன் விளைவாக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி தற்போது தனது ஆதரவை எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவையான நிலையில் எம்.க்யூ.எம் ஆதரவால் எதிர்கட்சி 177 இடங்களை கையில் வைத்துள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்படும் என பேச்சு எழுந்துள்ளது.
 
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.