செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:57 IST)

23 ஆண்டுகளுக்கு ரஷ்யாவுக்கு பயணம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர்!

23 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினை அவர் சந்திக்க இருப்பதாகவும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து பொருளாதாரம் வர்த்தகம் உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.