செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (12:22 IST)

அமைதியாக ஆட்சி நடத்த தலிபான்கள் இதை நடத்தவேண்டும்… பாக் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை!

அமைதியாக ஆட்சி நடத்த தலிபான்கள் இதை நடத்தவேண்டும்… பாக் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை!
ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவந்துள்ளனர் தலிபான்கள்.

நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். அமெரிக்க கூட்டுப்படைகள் முழுமையாக ஆப்கனை விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் விரைவில் தாலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் அமைய உள்ளது. இதை கனடா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை ஏற்கமாட்டோம் என அறிவித்து விட்டனர்.

பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் அமைதியான முறையில் ஆட்சி நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘தலிபான்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியைக் கொடுத்தால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு அமைதி நிலவும். அதில் அவர்கள் சறுக்கினால் பெரிய குழப்பம் ஏற்படும். ஆப்கன் பெண்கள் வலிமையானவர்கள். அவர்களின் உரிமைகளை அவர்களே பெற்றுக்கொள்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.