வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (17:29 IST)

''ரஷியாவுக்கு உதவினால்.''....சீனாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் !

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவுப்படி ரஷிய ராணு வீரர்கள் உக்ரைன் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகின்றனர்.

இப்போர் தொடங்கி 24  நாட்களாகும்  நிலையில், இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உதவி செய்துவரும் நிலையில்,   ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் இப்போரை நிறுத்தும்படி, ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது. ஆனால்,  தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சீனாவிடம்   நிதி மற்றும் ஆயுத உதவியை  ரஷ்யா கோரியுள்ளது.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர்  ஜோபிடன் சீன அதிபர் ஜஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசினார்.அப்போது, ரஷ்யாவுகு ஆயுத உதவி செய்யக்கூடாது எனவும், சீனா உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.