1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (08:07 IST)

அமெரிக்காவிடம் பிரச்சனை என்றால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-ஐ தடை செய்வீர்களா? அரசியல் விமர்சகர் கேள்வி

சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டிக் டாக் உள்பட 59 செயலிகளை தடை செய்துள்ள இந்தியா எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை ஏற்பட்டால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், போன்றவற்றை தடை செய்யுமா என அரசியல் விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்புவது உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த அராஜகத்தை கண்டித்து சீனாவின் அனைத்து செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் சீன பொருட்களை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் எழுச்சி குரல்கள் எழுந்தன
 
இந்த நிலையில் திடீரென நேற்று இரவு இந்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அதில் சீனாவின் செயலிகளான டிக் டாக் ஷேர் இட், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை என்று அதிரடியாக அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் சீனாவின் செயலிகளை தடை செய்வதால் மட்டும் இந்தியா-சீனா பிரச்சனை முடிந்து விடாது என்றும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டால் கூகுள் பேஸ்புக் வாட்ஸ்அப் போன்றவற்றை இந்தியா தடை செய்யுமா என்றும் அவ்வாறு தடை செய்தால் இந்தியாவின் நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் விமர்சகரின் இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது