உலக அளவிலான கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 4 லட்சம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிர்ச்சி

world corona
உலக அளவிலான கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 4 லட்சம்
Last Updated: செவ்வாய், 30 ஜூன் 2020 (07:17 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி உலகில் மொத்தம் 1,04,02,637 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளிவந்தூள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,07,518ஆக உயர்ந்துள்ளதாகவும்,
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56,48,728ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

உலக அளவில் கொரோனா பாதிப்பில் கடந்த சில மாதங்களாக முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,81,775ஆக உயர்வு என்பதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,777ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,370,488 ஆகவும்,
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 641,156 ஆகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,965 ஆகவும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 296,050 ஆகவும், பெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282,365 ஆகவும், சிலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275,999 ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567,536 ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,904ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :