ஒமிக்ரான் அச்சுறுத்தல்; இந்திய விமானங்களுக்கு தடை! – ஹாங்காங் அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹாங்காங் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முன்னதாக ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவிய கொரோனா தற்போது ஆசிய நாடுகளிலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மூன்றே நாட்களுக்குள் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதால் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுடனான விமான சேவையை ஹாங்காங் ரத்து செய்துள்ளது. மேலும் பல நாடுகள் கொரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளில் இருந்து விமான சேவையை ரத்து செய்து வருகின்றன.