செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (01:37 IST)

உலகக் கோடீஸ்வர்கள் பட்டியலில்’’ இவர்’’ முதலிடம்…. முகேஷ் அம்பானி எத்தனாவது இடம்??

உலகளவில் அதிகளவில் பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்l அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ்  முதலிடம் பெற்றுள்ளார். அடுத்ததாக டெஸ்லான் நிறுவன தலைமை செயலதிகார் எலான் மஸ்க்  2 ம் பெற்றுள்ளார்.

கடந்தாண்டை விட எலான் மஸ்க் 31 இடங்கள் முன்னேறியுள்ளார். பில்கேட்ஸ் 4 ம் இடம் பிடித்துள்ளார்.  ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்ஸ் 5 ம் இடம்பிடித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்து வாரன்பஃப்பெட், லாரி எலிசன், லாரி பேஸ், செர்ஜி பிரின் மற்றும் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளனர்.

 மேலும், இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பணக்காரர் அதானி 50.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளவில் 24 இடத்தில் உள்ளார்.