1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:32 IST)

''இன்ஸ்டாகிராம் ''ஹேக் செய்யப்பட்டதா? பயனாளர்கள் புகார்

உலகளவில் இன்று மக்கள் பயன்படுத்தும்  பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றிற்கு அடுத்து முக்கியப் பங்கு வகிப்பது,இன்ஸ்டாகிராம்.

இதில் சாதாரண நபர்கள் முதல் திரைநட்சத்திரங்கள், பில்லியனர்ஸ் வரை எல்லொரும் அக்கவுண்ட் வைத்து, தங்களின் புகைப்படங்களைப் பகிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, இன்ஸ்டாகிராம் சரியாகச் செயல்படவில்லை என ஆண்டிராய்ட் பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் யூடியுப் வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டதுபோல் இன்ஸ்டாவும் இன்று ஹேக் செய்யப்பட்டதா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.