1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:08 IST)

’’ஜியோ உடன் கூட்டணி எதற்கு ?’’ … ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகபெர்க் முக்கிய தகவல் !

ஜியோ பிளாட்மார்ம்ஸ் உடனாக கூட்டணி என்பது இந்தியாவிலுள்ள பல லட்சம்  சிறு வியாபாரிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரி மார்க் ஹூகப் பெர்க் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் குழும் தலைவர் முகேஷ் அம்பானியுடனான உரையாடலின்போது, இதுகுறித்து மார்க் கூறியுள்ளதாவது :

இந்தியாவிலுள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவுவதுதான் ஃபேஸ்புக் நிறூவனத்தின் நோக்கம். இதற்கு இந்தியாதான் சிறந்த இடம். இங்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு வியாபாரிகள் உள்ளனர். பல லட்சம் பேர் இதில் வேலைவாய்ப்புக்காக நம்பியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,567 கோடியில்  ஜியோ பிளாட்பார்மில் ரூ.9.99 சதவீதப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.