வகுப்பறைகளுக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவிலுள்ள ஆஸ்டின் மாகாணத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள வகுப்பறைகளுக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அந்நாடு அனுமதி அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் ஆஸ்டின் மாகாணத்தில் டெக்காஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் அடிக்கடி மாணவர்களுக்கு எதிராக சமூக விரோதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
எனவே இங்கு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.
எனவே அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வகுப்பறை வரையிலும் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவசியம் என்று பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
டெக்கால் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் துப்பாக்கி எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற கல்வி நிறுவனங்களுக்கு இந்த அனுமதி இல்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெரிய அளவில் பரவி வரும் நிலையில், மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது ஒருபுரம் எதிர்பபையும் மறுபுரம் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.