புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (10:52 IST)

யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மிகப் பிரபலமான யூ டியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் அமைந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று பெண் ஒருவர் யூ டியூப் நிறுவன ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய பெண், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண்ணின் உடலை மீட்டனர். மேலும் அந்த பெண் யார், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.