ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (09:30 IST)

யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு

உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான யூடியூப் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் பரிதாபமாக பலியானதாகவும், ஒருசிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை பிடிக்க தீவிர முயற்சி செய்ததாகவும், இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது ஒரு பெண்  என்று தெரிய வந்ததாகவும், ஆனால் அந்த பெண், போலீசாரிடம் பிடிபடாமல் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.