ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:48 IST)

காவலரை மிரட்டும் டிஜிபியின் மகள் - வைரல் வீடியோ

வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் ஒரு காவலரை, போலீஸ் உயர் அதிகாரியின் மகள் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர், ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அந்த காரில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இருந்துள்ளனர். அப்போது, அந்த பெண் தாறுமாறாக பேச, அந்த வண்டியை அந்த காவலர் வீடியோ எடுத்தார்.
 
அதைக் கண்டு கோபமடைந்த அப்பெண், என் அப்பா டிஜிபி, வீடியோ எடுக்காதீர்கள். மீறி எடுத்தால் வேறு இடத்திற்கு உங்களை மாற்றிவிடுவேன் என்கிற தோரணையில் மிரட்டுகிறார். அவர் எந்த டிஜிபியின் மகள் எனத் தெரியவில்லை. 
 
அதிகாரியின் மகள் எனக் கூறிக்கொள்ளும் அந்த பெண் திமிராக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.