1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:11 IST)

உக்ரைனில் மேப் சேவையை நிறுத்திய கூகுள்: காரணம் இதுதான்!

உக்ரேன் நாட்டில் மேப் சேவையையும் நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவி செய்துள்ள கூகுள் நிறுவனம் தற்போது உக்ரைன் நாட்டில் மேப் சேவையையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது 
 
உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்யாவின் படை கூகுள் மேப் மூலம் அந்நாட்டில் உள்ள முக்கிய இடங்களை கண்டு பிடித்து தாக்கி வருவதாகவும் அதனால் தான் உக்ரைன் நாட்டின் மேப் சேவையையும் நிறுத்துகிறது என்றும்  கூகுள் காரணம் கூறி உள்ளது