உக்ரைன் மீது படையெடுப்புக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு… 5000 பேர் கைது!
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை கடந்த வாரம் தொடங்கி நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதையடுத்து மக்கள் கூட்டமாக திரண்டு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.