1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (16:33 IST)

இந்தியாவின் AI மையமாக சென்னை விரைவில் உருவெடுக்கும்: யூனிஃபோர் நிறுவன சி.இ.ஓ. உமேஷ்

AI technology
இந்தியாவின் AI மையமாக விரைவில் சென்னை உருவாகும் என யூனிஃபார் நிறுவனத்தின் சிஇஓ உமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் புத்தாக்க மையத்தை இன்று ரமேஷ் திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் இந்த விழாவில் பேசிய போது மென்பொருள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை போலவே விரைவில் AI என்ற செயற்கை நுண்ணறிவிலும் இந்தியாவின் மையமாக சென்னை உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.  

AI  என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை இந்தியாவின் AI மையமாக உருவெடுத்தால் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran