செய்தி வெளியிடுபவர்களுக்கு நிதியளிக்கும் கூகுள் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Last Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:32 IST)

உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் கூகுள் நியுஸ் ஷோகேஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் இருந்து கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி அளிக்கப்படும் என சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘ சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலவசமாக கூகுளில் விளம்பரம் செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். இந்த திட்டம் அக்டோபர் மத்தியில் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியா போன்ற நாடுகளுக்கு விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :