திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:26 IST)

ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் டாப்ஸி.

தனுஷ், கிஷோர், டாப்ஸி, ஜெயபாலன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தனுஷுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தில் டாப்ஸி ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை த்ரிஷா. படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டார்.

ஆனால் படம் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்ல தாமதமானதாலும், அந்த நேரத்தில் ஒரு இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்ததாலும், அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் அந்த படத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன.