செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:53 IST)

பஞ்சாப் அணி வீரர்கள் தேர்வில் ஒருதலைப் பட்சம்… கும்ப்ளேவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் அணியில் அதிகளவில் கர்நாடக வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி பாதைக்கு நகர்ந்து வருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் பஞ்சாப் அணியில் கர்நாடக வீரர்களை அதிகளவில் தேர்வு செய்து விளையாட வைப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் மோசமாக விளையாடும் கர்நாடக வீரர் கருண் நாயரை தொடர்ந்து அணியில் வைத்து பஞ்சாப் வீரரான மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.