1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (19:03 IST)

ஒமிக்ரான் எதிரொலி: WFH-ஐ காலவரையின்றி அறிவித்த கூகுள்!!

ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி இருப்பதால் அலுவலகம் வர வேண்டும் என்ற திட்டத்தை கூகுள் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளதாக தகவல். 

 
கூகுள் நிறுவனம் கொரோனா பாதிப்பின் போது தனது ஊழியர்களுக்கு வீட்டில் ருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி 10 முதல் உலகம் முழுவதும் இயங்கி வரும் தனது அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என சொல்லி இருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி இருப்பதால் அலுவலகம் வர வேண்டும் என்ற திட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஊழியர்கள் எப்போது அலுவலகம் வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என கூகுள் நிர்வாகம், ஊழியர்களிடம் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.