23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!
உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனமான கூகுள் இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது 23வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த கூகுள் நிறுவனம். அதற்கு googol' என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள் (Google) என்று ஆனது.
இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், 24 பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
