1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Google make special doodle for Jupiter and Saturen meet

இன்னா நண்பா எப்படி இருக்க? வியாழன், சனி சந்திப்பு! – கூகிள் வெளியிட்ட டூடுள்!

World
சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கோள்களான வியாழன், சனி இன்று ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ள நிலையில் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது கூகிள்.

வானில் நிகழும் பல அரிய நிகழ்வுகளில் இன்று சூரிய குடும்பத்தின் மிக பெரும் கோள்களான சனியும், வியாழனும் ஒரே புள்ளியில் இணைந்து காட்சியளிக்க உள்ளன. 395 ஆண்டுகள் கழித்து நிகழும் இந்த அரிய நிகழ்வை காண மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அரிய நிகழ்வை உலகம் முழுவதிலும் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்தியாவில் மாலை 5.45 மணியளவில் மேற்கு திசையில் இந்த நிகழ்வை வெறும் கண்களால் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழனும், சனியும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளும்போது க்ளாப்ஸ் செய்து கொள்வது போலவும், குறுக்கே பூமி குல்லா அணிந்து துள்ளி குதிப்பது போலவும் டூடுள் வெளியிட்டு இந்நிகழ்வை சிறப்பித்துள்ளது கூகிள்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2021-ல் வரும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?