1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (16:04 IST)

ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் அதிரடி கைது

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தன. ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள்  திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.188 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. இருப்பினும் நஜீப் ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் பணமோசடி தடுப்பு பிரிவினர் இன்று நஜீப் ரசாக்கின் வீடு புகுந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.