திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (12:35 IST)

ஊழல் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் - வைரல் போஸ்டர்

பாஜகவிற்கு ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
அனைத்து அரசியல் கட்சிகளும் துண்டுச் சீட்டு, போஸ்டர், பேனர், சுவர் விளம்பரம் என பல வழிகளில் தங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயல்வது வழக்கமான ஒன்றுதான்.தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் கட்சிகள் ஆதரவு தேடி வந்தாலும், பழைய முறையான சுவர் விளம்பரமும் இன்னும் தமிழகத்தில் எழுத்தப்பட்டுதான் வருகிறது.
 
இந்த நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஊழல் நல்லாட்சி அமைந்திட  வாக்களிப்பீர் தாமரைக்கு என எழுதியிருப்பதுதான் ஹைலைட்... 
 
இதை பலரும் பகிருந்து கிண்டலடித்து வருகின்றனர்.