வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (08:30 IST)

மோடியும் யோகியும் மட்டுமே எங்கள் கட்சியில் ஊழல் செய்யாதவர்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு

கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களிடமும், எதிர்க்கட்சி தலைவர்களிடமும் வாங்கி கட்டி கொள்வதையே வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெற்றோர்களே காரணம் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறியவர் பா.ஜ.க எம்.பி., பிரிஜ்பூஷண் சரண். இவர் உபி மாநிலத்தில் உள்ள கைசர்கஞ்ச் என்ற தொகுதியின் எம்பியாக உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரிஜ்பூஷன் சரண், 'பாஜகவில் பிரதமர் மோடியும், உபி முதல்வர் யோகியும் மட்டுமே இதுவரை ஊழல் செய்யாதவர்கள். மற்றவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூற முடியாது என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இவருடைய இந்த கருத்து பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்டியுள்ளது.
 
பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து வருவதால் பாஜக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.